search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீட்டர் சிடில்"

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் சிடில், நாதன் லயன் இடம் பிடித்துள்ளனர். #AUSvIND
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி வருகிற 12-ந்தேதி சிட்னியிலும், 2-வது போட்டி 15-ந்தேதி அடிலெய்டிலும், 3-வது போட்டி 18-ந்தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. உஸ்மான் கவாஜா, பீட்டர் சிடில் அணிக்கு திரும்பி உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய கிறிஸ் லின், ஆர்கி டி'ஷார்ட், டிராவிஸ் ஹெட், அஷ்டோன் அகர் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக், பெரென்டோர்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் சம்பா.
    துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகமது ஹபீஸ் (126), இமாம்-உல்-ஹக் (76) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்திருந்தது.

    ஹரிஸ் சோஹைல் 15 ரன்னுடனும், முகமது அப்பாஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முகமது அப்பாஸ் நேற்று எடுத்திருந்த 1 ரன்னிலேயே வெளியேறினார்.


    80 ரன்னில் ஆட்டமிழந்த ஆசாத் ஷபிக்

    அடுத்து ஆசாத் ஷபிக் களம் இறங்கினார். ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோஹைல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.


    3 விக்கெட் வீழ்த்திய பீட்டர் சிடில்

    இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 164.2 ஓவர்கள் விளையாடி 482 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பீட்டில் சிடில் 3 விக்கெட்டும், நாதன் லயன் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ×